தெய்வன்புக்காக உன்னத / Deivanpukkaaga Unnadha / Deivanpukkaaga Unnatha / Deivanpukkaga Unnadha / Deivanpukkaga Unnatha

தெய்வன்புக்காக உன்னத / Deivanpukkaaga Unnadha / Deivanpukkaaga Unnatha / Deivanpukkaga Unnadha / Deivanpukkaga Unnatha

1   
தெய்வன்புக்காக உன்னத
கர்த்தாவுக்குப் புகழ்ச்சி
என் பாவக்கேட்டை நீக்கின
அருள் மகா திரட்சி
மெய்ச் சமாதானம் என்றைக்கும்
மானிடர்மேல் பிரியமும்
உண்டாம் இரக்கம் பெற்றோம்

2   
மாறாமல் ஆண்டிருக்கிற
மகத்துவப் பிதாவே
துதியோடும்மைக் கும்பிட
பணிகிறோம் கர்த்தாவே
அளவில்லாப் பலமாய் நீர்
நினைத்த யாவும் செய்கிறீர்
மா பாக்கியர் அடியார்

3   
ஆ இயேசு தெய்வ மைந்தனே
கடன்களைச் செலுத்தி
கெட்டோரை மீட்ட மீட்பரே
மாசற்ற ஆட்டுக்குட்டி
மா கர்த்தரே தயாபரா
அடியார் சத்தம் கேட்டெல்லா
சபைக்கும் நீர் இரங்கும்

4   
மெய்யாகத் தேற்றும் உன்னத
தெய்வாவீ நீர் அன்பாக
இறங்கி கிறிஸ்து தம்முட
சாவால் பிரியமாக
மீட்டோரைச் சாத்தான் கண்ணியில்
விழாதே காத்து துன்பத்தில்
ஜெயிக்கப்பண்ணும் ஆமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!