அபிஷேகம் பெற்ற சீஷர் / Abishegam Petra Seeshar

அபிஷேகம் பெற்ற சீஷர் / Abishegam Petra Seeshar

1    
அபிஷேகம் பெற்ற சீஷர்
தெய்வ வாக்கைக் கூறினார்
கட்டளை கொடுத்த மீட்பர்
கூட இருப்பேன் என்றார்

2    
இயேசுவே நீர் சொன்ன வண்ணம்
ஏழை அடியாருக்கே
ஊக்கம் தந்து நல்ல எண்ணம்
சித்தியாகச் செய்வீரே

3    
முத்திரிக்கப்பட்ட யாரும்
ஆவியால் நிறைந்தோராய்
வாக்கைக் கூற வரம் தாரும்
அனல்மூட்டும் தயவாய்

4    
வாக்குத்தத்தம் நிறைவேற
சர்வ தேசத்தார்களும்
உந்தன் பாதம் வந்து சேர
அநுக்கிரகம் செய்திடும்

5    
பிதா சுதன் தூய ஆவி
என்னும் தேவரீருக்கே
தோத்திரம் புகழ்ச்சி கீர்த்தி
விண் மண்ணில் உண்டாகுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!