தேடுங்கள் கண்டடைவீர் / Thedungal Kandadaiveer
தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே
தேடிடுவோம் அதிகாலமே
தேடுங்கள் கண்டடைவீர்
1
சென்ற வாழ்நாளெல்லாம் காத்தார் எந்த
சேதமும் வந்தணுகாமல்
இந்தப் புது தினம் கண்டடைய
தந்தனரே தமது கிருபை
தேடுங்கள் கண்டடைவீர்
தேவ தேவனின் தூய திருமுகம் காண
தேடிடுவோம் அதிகாலமே
தேடிடுவோம் அதிகாலமே
தேடுங்கள் கண்டடைவீர்
2
நல்ல சுகம் பெலன் தந்து தம்
வல்ல நல ஆவியும் ஈந்து
நல்ல சுகம் பெலன் தந்து தம்
வல்ல நல ஆவியும் ஈந்து
வெல்ல பிசாசை ஜெயமெடுத்து
சொல்லதம் அன்பென்னிலே பொழிந்தார்
தேடுங்கள் கண்டடைவீர்
3
ஊண் உடை தந்தா தரித்து இந்த
ஊழிய பாதையில் காத்து
ஊண் உடை தந்தா தரித்து இந்த
ஊழிய பாதையில் காத்து
கூப்பிடும் வேளை செவி கொடுத்து
கேட்டிடும் யாவையும் ஈந்தனரே
தேடுங்கள் கண்டடைவீர்
4
ஜீவனும் உள்ள நாளெல்லாம் என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஜீவனும் உள்ள நாளெல்லாம் என்
தேவனைக் கீர்த்தனம் பண்ணி
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
நேசையா ஏசுவை ஸ்தோத்தரிப்போம்
தேடுங்கள் கண்டடைவீர்
5
காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த
வேளையில் வேதத்தின் தியானம்
நல் ஜெப தூபம் எனது இன்பம்
நற்கிரியைகள் செய்துழைப்பேன்
தேடுங்கள் கண்டடைவீர்
6
கர்த்தரை நான் எப்பொழுதும் என்
கண்முன்னில் நிறுத்தி நோக்க
கர்த்தரை நான் எப்பொழுதும் என்
கண்முன்னில் நிறுத்தி நோக்க
நாள் முழுவதும் அவர் பின் நடக்க
நேர்வழி பாதையுங் காட்டிடுவார்
தேடுங்கள் கண்டடைவீர்
தேடுங்கள் கண்டடைவீர் / Thedungal Kandadaiveer | Sarah Navaroji
தேடுங்கள் கண்டடைவீர் / Thedungal Kandadaiveer | Deborah Hegai
தேடுங்கள் கண்டடைவீர் / Thedungal Kandadaiveer