மனதுருக்கமும் நீடிய சாந்தமும் / Manadurukkamum Neediya Saanthamum / Manadurukkamum Neediya Saandhamum
மனதுருக்கமும் நீடிய சாந்தமும்
உடையவரே உம்மைத் துதிக்கிறேன்
மகா இரக்கமும் மிகுந்த கிருபையும்
நிறைந்தவரே உம்மைத் துதிக்கிறேன்
என் அக்ரமங்களையெல்லாம் மன்னித்தீர் மறந்தீரே
என் நோய்நொடிகளையெல்லாம் குணமாக்கினீர் காத்தீரே
என்னை மன்னியும் தேவனே இந்த ஒருவிசை மன்னியுமே
என்னை மன்னியும் தேவனே இந்த ஒருவிசை மன்னியுமே
இயேசுவே இயேசுவே
1
ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு
இரங்குவது போல இரங்கினீர்
ஒரு அன்னை தன்னுடைய பாலகனைத்
தேற்றுவது போல தேற்றினீர்
கிழக்குக்கும் மேற்குக்கும் தூரமாய் என் பாவத்தை விலக்கினீர்
வானுக்கும் பூமிக்கும் உயரமாய் உம் கிருபையைக் காட்டினீர்
உம் கிருபை பெரியது உம் மன்னிப்பு சிறந்தது
உம் கிருபை பெரியது உம் மன்னிப்பு சிறந்தது
இயேசுவே இயேசுவே
2
என்னை அழிவின் பாதைக்கு விலக்கியே
கிருபையால் முடி சூட்டினீர்
உம் அன்பை என்றும் நான் அறிவிக்கவே
தெரிந்துகொண்டீரே என்னையும்
என் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றினீர் போஷித்தீர்
என் விண்ணப்பங்க ளனைத்தையும் கேட்டுநீர் தேற்றினீர்
யெகோவாயீரே நீர் எல்லாம் தருபவர்
யெகோவாயீரே நீர் எல்லாம் தருபவர்
இயேசுவே இயேசுவே
மனதுருக்கமும் நீடிய சாந்தமும்
உடையவரே உம்மைத் துதிக்கிறேன்
மகா இரக்கமும் மிகுந்த கிருபையும்
நிறைந்தவரே உம்மைத் துதிக்கிறேன்
என் அக்ரமங்களையெல்லாம் மன்னித்தீர் மறந்தீரே
என் நோய்நொடிகளையெல்லாம் குணமாக்கினீர் காத்தீரே
என்னை மன்னியும் தேவனே இந்த ஒருவிசை மன்னியுமே
என்னை மன்னியும் தேவனே இந்த ஒருவிசை மன்னியுமே
இயேசுவே இயேசுவே
மனதுருக்கமும் நீடிய சாந்தமும் / Manadurukkamum Neediya Saanthamum / Manadurukkamum Neediya Saandhamum | S. Ally Sornam | Vijay Ganesh | J. Jeba Joselin