இயேசுவே நீர்தாம் / Yesuve Neerdhaam / Yesuve Neerthaam / Yesuve Neerdham / Yesuve Neertham

இயேசுவே நீர்தாம் / Yesuve Neerdhaam / Yesuve Neerthaam / Yesuve Neerdham / Yesuve Neertham

1           
இயேசுவே நீர்தாம்
ஜீவ நாள் எல்லாம்
மோட்சத்துக்கு சேருமட்டும்
கைதந்தெங்களை நடத்தும்
நீர் முன்னாலே போம்,
உம்மோடேகுவோம்

2   
தீங்கு மிஞ்சினால்
எங்களை அன்பால்
கலங்காதபடி காரும்
நிலை நிற்கும் வரம் தாரும்
இங்கே சிலுவை,
அங்கே மகிமை

3   
சொந்த கிலேசமும்
நேசர் துன்பமும்
நெஞ்சை வாதித்தால் அன்பாக
பொறுமை அளிப்பீராக
ஜீவ கிரீடத்தை
நோக்க நீர் துணை

4   
நீர் இவ்வுலகில்
கஷ்ட வழியில்
எங்களை நடத்தினாலும்
ஆதரியும் நாங்கள் மாளும்
போதும்மிடமே
சேரும், நேசரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!