உங்க அழைப்பு இருந்ததால | Unga Azhaippu Irunthathaala / Unga Azhaippu Irundhadhaala / Unga Alaippu Irunthathaala / Unga Alaippu Irundhadhaala
உங்க அழைப்பு இருந்ததால
நான் அழிந்து போகவில்லை
உங்க அன்பு இருந்ததால
நான் கைவிடப்படல
உங்க கிருபை என்ன காப்பதால
வாழ்ந்துகொண்டிருக்கேன்
உங்க அன்பிற்கு நிகரே இல்ல
உங்க கிருபை என்ன காப்பதால
வாழ்ந்துகொண்டிருக்கேன்
உங்க அன்பிற்கு நிகரே இல்ல
1
எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்
உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே
துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும்
உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே
எஜமானனே என் எஜமானனே
என்னை அழைத்த எஜமானனே
எஜமானனே என் எஜமானனே
என்றும் நடத்தும் எஜமானனே
2
மனிதர் அடைத்த கரங்கள் ஒன்றோ இரண்டோ
நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ
உடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும்
என்னை துரத்தி வந்து ஊழியத்தை துவங்க செய்தீரே
என் ஆதாரமே என் ஆதரவே
அழைத்த அழைப்பின் காரணரே
என் ஆதாரமே என் ஆதரவே
அழைத்த அழைப்பின் காரணரே
3
அழைத்தவர் நீரோ உண்மை உள்ளவர் என்னை
உயர்த்தி வைக்கும் மேன்மையான திட்டம் கொண்டவர்
என்ன வந்தாலும் ஏது வந்தாலும் தொடரச் செய்தவர்
நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதி உள்ளவர்
உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன்
இறுதி வரை உம்மை சேவிப்பேன்
உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன்
இறுதி வரை உம்மை சேவிப்பேன்
உங்க அழைப்பு இருந்ததால
நான் அழிந்து போகவில்லை
உங்க அன்பு இருந்ததால
நான் கைவிடப்படல
உங்க கிருபை என்ன காப்பதால
வாழ்ந்துகொண்டிருக்கேன்
உங்க அன்பிற்கு நிகரே இல்ல
இயேசுவின் கிருபை என்ன காப்பதால
வாழ்ந்துகொண்டிருக்கேன்
அவர் அன்பிற்கு நிகரே இல்ல
உங்க அழைப்பு இருந்ததால | Unga Azhaippu Irunthathaala / Unga Azhaippu Irundhadhaala / Unga Alaippu Irunthathaala / Unga Alaippu Irundhadhaala | Benny Joshua | Isaac D.