benny

வனையும் | Vanaiyum

மண்ணான என் வாழ்வை வனையும் களி
மண்ணான என் வாழ்வை வனையும்
தேவா மனமிரங்கும்
தேவா மனமிரங்கும்

குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கிடுமே
குறைவுள்ள பாத்திரம் நான்
குறைவுகள் நீக்கிடுமே

உம்மைப் போல் மாற்றிடுமே என்னை
உம்மைப்போல் மாற்றிடுமே
உம்மைப் போல் மாற்றிடுமே என்னை
உம்மைப்போல் மாற்றிடுமே

வனையும் முழுவதுமாய்
வனையும் முழுவதுமாய்

1
திசைமாறும் என் படகினை
நேர்வழி படுத்துமையா
புயல்கள் வீசும் என் வாழ்வினில்
அமைதித் தாருமையா

தள்ளாடி நடந்த என் வாழ்வினை
உருவமாய் வனையுமையா
தள்ளாடி நடந்த என் வாழ்வினை
உருவமாய் வனையுமையா

வனையும் முழுவதுமாய்
வனையும் முழுவதுமாய்

2
பிறரால் தள்ளப்பட்ட இந்தக் கல்லை
மூலைக்கல்லாய் மாற்றினீரே
அவமானம் நிறைந்த என் வாழ்வை
மகிமையாய் நிரப்பினீரே

உடைந்தேன் தவறினேன்
மறுபடியும் வனைந்தீர்
உடைந்தேன் தவறினேன்
மறுபடியும் வனைந்தீர்

வனைந்தீர் முழுவதுமாய்
வனைந்தீர் முழுவதுமாய்

வனையும் | Vanaiyum | Benny Hinn Jebasen, Daphnie, Gracia Moses, Jane Joshua, Jane Carolyn

Don`t copy text!