உம் நாமம் சொல்ல சொல்ல / Um Naamam Solla Solla / Um Namam Solla Solla
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
1
மாணிக்க தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா
மாணிக்க தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா இயேசையா
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
2
பாலென்பேன் தேனென்பேன் தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
பாலென்பேன் தேனென்பேன் தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன் இயேசையா
மறையென்பேன் நிறையென்பேன் நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
3
முதலென்பேன் முடிவென்பேன் மூன்றில் ஓர் வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன்
முதலென்பேன் முடிவென்பேன் மூன்றில் ஓர் வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன் இயேசையா
மொழியென்பேன் மொழியென்பேன் வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன்
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா