எங்கே தேடுவேன் / Enge Theduvaen / Enge Theduven

எங்கே தேடுவேன் / Enge Theduvaen / Enge Theduven

எங்கே தேடுவேன் நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை நான் எங்கே
தேடுவேன்

1
உன்னதராஜனே ஆ என்
உத்தம நேசரே
உம் உன்னத அன்பாலே ஆ என்
உள்ளம் உருகுதே

எங்கே தேடுவேன் நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை நான் எங்கே
தேடுவேன்

2
மலரின் நடுவிலோ நேசரை மல்லிகை
வனத்திலோ மாடி வீடதிலோ
இல்லையேல் மன்னர் மத்தியிலோ

எங்கே தேடுவேன் நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை நான் எங்கே
தேடுவேன்

3
அழகாய்  மான்போலே நேசர்
அலைந்து வாராரே அரச குமாரருள்
ஆ என் அன்பர் ஒருவரே

எங்கே தேடுவேன் நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை நான் எங்கே
தேடுவேன்

4
காட்டுமரங்களுள் நேசர்
கிச்சிலி மரம்போலாம்
கமழும் மலர்களுள் நேசர்
இன்ப லீலியாம்

எங்கே தேடுவேன் நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை நான் எங்கே
தேடுவேன்

5
அழகு வாய்ந்தவர் நேசர்
அன்பு மிகுந்தவர்
அறிவு மிகுந்தவர் நேசர்
அனைத்தும் அறிபவர்

எங்கே தேடுவேன் நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை நான் எங்கே
தேடுவேன்

6
காலைத் தேடுவேன் நேசரைக்
கண்டு மகிழ்வேன்
கருத்தாய்  பாடுவேன் நேசரின்
காதலை நாடுவேன்

எங்கே தேடுவேன் நான்
எங்கே தேடுவேன்
என் நேசர் இயேசுவை நான் எங்கே
தேடுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!