உம் அன்பே / Um Anbae
இருள் சூழ்ந்த வேளையில்
உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில்
உம் அன்பே போதுமே
1
இருள் சூழ்ந்த வேளையில்
உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில்
உம் அன்பே போதுமே
கவலை மறந்தது உந்தன் வாக்காலே
கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே
மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே
பாவம் தீர்ந்தது உந்தன் தயவாலே
உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்
கைவிடப்படல ஏமாற்றமடைய
நீர் என்னை விடல எப்போதுமே
கைவிடப்படல ஏமாற்றமடைய
நீர் என்னை விடல எப்போதுமே
2
இருள் சூழ்ந்த வேளையில்
உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில்
உம் அன்பே போதுமே
தவிப்பு குறைந்தது தந்தை உம்மாலே
தைரியம் வந்தது தேவன் தம்மாலே
பேர் பெற்றேனே உந்தன் பேராலே
ஜெயம் கொண்டேனே வேந்தன் உம்மாலே
உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்
கைவிடப்படல ஏமாற்றமடைய
நீர் என்னை விடல எப்போதுமே
கைவிடப்படல ஏமாற்றமடைய
நீர் என்னை விடல எப்போதுமே
உம் அன்பே / Um Anbae | Eric Osben