தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ / Thayakam Yeno Thaamadham Yeno / Thayakam Yeno Thamadham Yeno
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
நீ தேடும் அமைதி இவரில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு
1
அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே இவர்தான்
கருணையின் அவதாரம் இவரே இவர்தான்
இருண்டதோர் நிலைமையின் விடியலும் இவர்தான்
வாடின வாழ்க்கையின் வசந்தமே இவர்தான்
நாடிடு இவரை அமைதியே
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
2
நொறுங்குண்ட இதயத்தை ஏற்பவர் இவர்தான்
நறுங்குண்ட மனதுக்கு ஒளஷதம் இவர்தான்
மன்னிப்பின் ஸ்வரூபம் இவரே இவர்தான்
மனுக்குலம் மீட்கும் மீட்பரும் இவர்தான்
இவரது நாமம் இயேசுவே
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோ
தருணம் இது உந்தன் தருணம் இது
நீ தேடும் அமைதி இயேசுவில் உண்டு
இவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு