இவரே நம் தேவன் | Ivare Nam Devan / Ivarae Nam Devan
1
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வமும் சிருஷ்டித்த சர்வவல்லவர்
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வமும் சிருஷ்டித்த சர்வவல்லவர்
சகலமும் தம் வசனம் தங்குவதாலே
எல்லாமே தம் நிலையில் நிற்கிறது
சகலமும் தம் வசனம் தங்குவதாலே
எல்லாமே தம் நிலையில் நிற்கிறது
வானாதி வானங்களே கெம்பீரமாய்ப் பாடுங்கள்
பூமியின் குடிகளே களிகூர்ந்து பாடிடுவோம்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
2
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
ஆழத்தில் அதிசயங்கள் செய்பவர்
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
ஆழத்தில் அதிசயங்கள் செய்பவர்
அலைகளே மிஞ்சிவராதே என்றதால்
ஆறுதல் அடைந்தோராய் முன் செல்கிறோம்
அலைகளே மிஞ்சிவராதே என்றதால்
ஆறுதல் அடைந்தோராய் முன் செல்கிறோம்
வானாதி வானங்களே கெம்பீரமாய்ப் பாடுங்கள்
பூமியின் குடிகளே களிகூர்ந்து பாடிடுவோம்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
3
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
மரணத்தை ஜெயமாக விழுங்கியவர்
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
மரணத்தை ஜெயமாக விழுங்கியவர்
மரணவாசலினின்று தூக்கி எடுத்ததால்
ஜீவ மார்க்கத்தில் சாட்சியாய் நிற்கிறோம்
மரணவாசலினின்று தூக்கி எடுத்ததால்
ஜீவ மார்க்கத்தில் சாட்சியாய் நிற்கிறோம்
வானாதி வானங்களே கெம்பீரமாய்ப் பாடுங்கள்
பூமியின் குடிகளே களிகூர்ந்து பாடிடுவோம்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
4
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
முற்றிலும் அழகில் சிறந்த நேசர்
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
முற்றிலும் அழகில் சிறந்த நேசர்
தினம் உந்தன் நுகம் ஏற்றுப் பின் செல்வதாலே
திவ்ய சுபாவத்தில் சிறந்தோராம்
தினம் உந்தன் நுகம் ஏற்றுப் பின் செல்வதாலே
திவ்ய சுபாவத்தில் சிறந்தோராம்
வானாதி வானங்களே கெம்பீரமாய்ப் பாடுங்கள்
பூமியின் குடிகளே களிகூர்ந்து பாடிடுவோம்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
5
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வ பூமியையும் மகிழ்விப்பவர்
இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வ பூமியையும் மகிழ்விப்பவர்
இணைந்துயர்ந்து வளர்தேறுவதாலே
இணையில்லா இராஜாவின் நகரமாவோம்
இணைந்துயர்ந்து வளர்தேறுவதாலே
இணையில்லா இராஜாவின் நகரமாவோம்
வானாதி வானங்களே கெம்பீரமாய்ப் பாடுங்கள்
பூமியின் குடிகளே களிகூர்ந்து பாடிடுவோம்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
தேவன் தம் ஜனத்தின் கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்
இவரே நம் தேவன் | Ivare Nam Devan / Ivarae Nam Devan