சோர்வான ஆவியை நீக்கும் / Sorvaana Aaviyai Neekkum / Sorvana Aaviyai Neekum / Sorvana Aviyai Neekum
1
சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்
சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்
இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே
2
ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா
ஊழியப் பாதையில் துன்பம்
விசுவாசிகளாலே நெருக்கம்
ஏன் இந்த ஊழியம் எனக்கு
உமக்காகத்தானே ஐயா
இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே
3
காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே
காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே
இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே
4
வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே
வீடும் வாசலும் இல்லை
உற்றார் உறவினர் தொல்லை
எங்கே ஓடுவேன் நான்
உமது சமூகத்திற்கே
இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே
5
இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர்
இரவெல்லாம் உறக்கமே இல்லை
வியாதியால் மனக்கவலை
தாங்குவோர் யாருமே இல்லை
நீரே பார்த்துக்கொள்வீர்
இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே