புல்லைப் போல் / Pullai Pol
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை
நிலையான வாழ்வு இங்கே இல்லை
புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை
நிலையான வாழ்வு இங்கே இல்லை
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
1
பிறக்கும் போதும் இறக்கும் போதும்
மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லை
கொண்டு வந்ததில்லை
கொண்டு போவதில்லை
கண்கள் காண்பதின்றி பெலன் இல்லை
போதும் என்கிற மனதுடனே
தேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம்
போதும் என்கிற மனதுடனே
தேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம்
நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்
இயேசுவை அனுதினம் தேடிடுவோம்
நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்
இயேசுவை அனுதினம் தேடிடுவோம்
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
2
மாயை மாயை தான் எல்லாம் மாயை தான்
மாய லோகமாய் இவ்வுலகில்
நேற்று வாழ்ந்தவர் இன்று இல்லையே
நாளை நடப்பதை நாம் அறிவோம்
நாளை என்பது நமது அல்ல
நமது ஜீவன் நம் கையில் அல்ல
நாளை என்பது நமது அல்ல
நமது ஜீவன் நம் கையில் அல்ல
நல்வாராம் நம் இயேசுவிடம்
நமது வாழ்வினைக் கொடுத்திடுவோம்
நல்வாராம் நம் இயேசுவிடம்
நமது வாழ்வினைக் கொடுத்திடுவோம்
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
3
உலகம் அனைத்தையும் சொந்தமாக்கியும்
நமது ஜீவனை நாம் இழந்தால்
லாபம் ஒன்றும் இல்லை மேன்மை ஒன்றும் இல்லை
வாழ்ந்த வாழ்க்கையால் பயன் இல்லை
அகிலம் அனைத்திற்கும் ஆண்டவராய்
இயேசு ஒருவரே இரட்சகராய் நம்
அகிலம் அனைத்திற்கும் ஆண்டவராய்
இயேசு ஒருவரே இரட்சகராய்
வழியாய் ஒளியாய் வந்தவரை
உள்ளத்தில் ஏற்றிட உறுதிகொள்வோம்
வழியாய் ஒளியாய் வந்தவரை
உள்ளத்தில் ஏற்றிட உறுதிகொள்வோம்
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை
புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை
நிலையான வாழ்வு இங்கே இல்லை
புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லை
நிலையான வாழ்வு இங்கே இல்லை
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை