கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது / Kartharin Satham Vallamaiyuladhu / Kartharin Satham Vallamai Ullathu
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா
1
பலவான்களின் புத்திரரே
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா குமாரன் பரிசுத்தாவியின்
புதிய ஆசீர்வாதம் பெருக
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா
2
கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கின்றார்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா
3
அக்கினி ஜுவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீக மெங்கும் ஜொலிக்கும்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா
4
பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார்
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது / Kartharin Satham Vallamaiyuladhu / Kartharin Satham Vallamai Ullathu | Sarah Navaroji
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது / Kartharin Satham Vallamaiyuladhu / Kartharin Satham Vallamai Ullathu | Jacob Koshy | Sarah Navaroji
கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது / Kartharin Satham Vallamaiyuladhu / Kartharin Satham Vallamai Ullathu | Jollee Abraham | Sarah Navaroji
