கல்வாரி நாயகனே / Kalvaari Naayagane / Kalvari Nayagane / Kalvaari Naayakane / Kalvari Nayakane / Kalvaari Naayaganae / Kalvari Nayaganae
கல்வாரி நாயகனே
காருண்ய ரட்சகனே
கல்வாரி நாயகனே
காருண்ய ரட்சகனே
கல்வாரி மாமலைமேல்
தொங்கின நேசரை காணவந்தேன்
கல்வாரி மாமலைமேல்
தொங்கின நேசரை காணவந்தேன்
1
கன்னத்தில் உமிழ்நீர் ஏற்றிரோ
என் அவமானங்களை மாற்ற
என் கோப வார்த்தைகளால்
உம் கன்னம் அறைந்தேனோ
கன்னத்தில் உமிழ்நீர் ஏற்றிரோ
என் அவமானங்களை மாற்ற
என் கோப வார்த்தைகளால்
உம் கன்னம் அறைந்தேனோ
எனக்காகவே இப்பாடுகள்
உம் அன்பு மேலானதே
எனக்காகத்தான் இப்பாடுகள்
இயேசுவே நீர் வாழ்கவே
கல்வாரி நாயகனே
காருண்ய ரட்சகனே
2
சிரசினில் முள்முடி சுமந்தீரோ
தீய எண்ணங்களை நீக்க
என் கரத்தின் களவுகளால்
உம் கரங்களில் ஆணிகளோ
சிரசினில் முள்முடி சுமந்தீரோ
தீய எண்ணங்களை நீக்க
என் கரத்தின் களவுகளால்
உம் கரங்களில் ஆணிகளோ
அந்தக்கேடாய் தொங்கினீரே
உம் அன்பு மேலானதே
அந்தகேடான என் வாழ்க்கையை
அழகாக மாற்றினீரே
கல்வாரி நாயகனே
காருண்ய ரட்சகனே
3
கால்களில் ஆணிகள் அறைந்தனரோ
பாவ வழிகளை சீராக்க
என் ஜென்ம சுபாவங்களை
உம்மை கிழித்த சாட்டைகளோ
கால்களில் ஆணிகள் அறைந்தனரோ
பாவ வழிகளை சீராக்க
என் ஜென்ம சுபாவங்களை
உம்மை கிழித்த சாட்டைகளோ
விரும்பத்தகாத ரூபமானீர்
உம் அன்பு மேலானதே
விரும்பத்தகாத என்னையும்
நேசித்து அரவனைத்தீர்
கல்வாரி நாயகனே
காருண்ய ரட்சகனே
கல்வாரி நாயகனே
காருண்ய ரட்சகனே
கல்வாரி மாமலைமேல்
தொங்கின நேசரை காணவந்தேன்
கல்வாரி மாமலைமேல்
தொங்கின நேசரை காணவந்தேன்
கல்வாரி நாயகனே / Kalvaari Naayagane / Kalvari Nayagane / Kalvaari Naayakane / Kalvari Nayakane / Kalvaari Naayaganae / Kalvari Nayaganae | Veena | James Vasanthan | A. M. Richards, Redeemer Lives Ministries, Chennai, Tamil Nadu, India