இன்னுமா என் பேரில் நம்பிக்க | Innumaa En Paeril Nambikka
இன்னுமா என் பேரில் நம்பிக்க
என் அப்பாவின் அன்பை நான்
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல
இன்னுமா என் பேரில் நம்பிக்க
என் அப்பாவின் அன்பை நான்
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல
தடம் மாறி போனபோது
பின் தொடர்ந்தீரே
நான் பாவ சேற்றில் வீழ்ந்த போது
தூக்கியெடுத்தீரே
தடம் மாறி போனபோது
பின் தொடர்ந்தீரே
நான் பாவ சேற்றில் வீழ்ந்த போது
தூக்கியெடுத்தீரே
கரம் பிடித்த உம்மை நான்
உதறி தள்ளினேன்
உலக இன்பம் கண்டு நான்
தடுமாறினேன்
இந்த உலகம் இன்பம் கண்டு
நான் தடுமாறினேன்
மீண்டும் தடம்மாறினேன்?
இன்னுமா என் பேரில் நம்பிக்க
என் அப்பாவின் அன்பை நான்
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல
1
மாம்ச இச்சை பொருளாசை
என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல
நானும் திரும்பி பார்த்தேனே
மாம்ச இச்சை பொருளாசை
என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல
நானும் திரும்பி பார்த்தேனே
துளி விஷத்தை மனதுக்குள்ளே
அனுமதிக்கவே
முள் புதருக்குள்ளே விளைப்பயிராய்
தடுமாறினேன்
இயேசு அப்பா உம்மை விட்டு
நான் ஒளிந்தோடினேன்
இயேசு அப்பா உம்மை விட்டு
நான் ஒளிந்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்
ஒளிந்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி
ஒளிந்தோடினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்க
என் அப்பாவின் அன்பை நான்
என்ன சொல்ல என்ன சொல்ல
என்ன சொல்ல
2
என்னை சுற்றி எத்தனையோ
பேர் இருந்துமே
பணம் பதவி புகழ் பகட்டு
எல்லாம் இருந்துமே
என்னை சுற்றி எத்தனையோ
பேர் இருந்துமே
பணம் பதவி புகழ் பகட்டு
எல்லாம் இருந்துமே
பல இரவுகள் மனமொடிந்து
தனித்திருந்தேனே
மீண்டும் ஒரு நாள் அவர் மடியில்
மனங்கசந்தேனே
இயேசு அப்பா என்னை மீண்டும்
மீட்டெடுத்தாரே
இயேசு அப்பா என்னை மீண்டும்
மீட்டெடுத்தாரே
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்
மீட்டெடுத்தாரே
மீண்டும் மீண்டும் மீண்டும்
அன்பால் மீட்டெடுத்தாரே
இன்னுமா என் பேரில் நம்பிக்க
என் அப்பாவின் அன்பை நான்
என்ன சொல்ல நான்
என்ன சொல்ல
இன்னுமே என் பேரில் நம்பிக்க
இயேசு அப்பாவுக்கு நான்
என்றும் செல்லப்பிள்ள
என்றும் செல்லப்பிள்ள
இன்னுமா என் பேரில் நம்பிக்க | Innumaa En Paeril Nambikka | Davidsam Joyson | Sinto Chiramal | A. Pravin Asir