எப்போதும் நாதனை ஸ்தோத்திரி | Eppothum Naathanai Sthothiri / Eppodhum Naadhanai Sthothiri / Eppothum Naathanai Sthoththiri / Eppodhum Naadhanai Sthoththiri
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நான்
தப்பாமல் ஆண்டவன் பொற் பாதத்தை பணிந்து
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி எப்போ
தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி எப்போ
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நான்
தப்பாமல் ஆண்டவன் பொற் பாதத்தை பணிந்து
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
1
இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
ஏதுக்கென் றுள்ளத்தி லெண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நான்
தப்பாமல் ஆண்டவன் பொற் பாதத்தை பணிந்து
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
2
சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத்தாங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத்தாங்கவே
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நான்
தப்பாமல் ஆண்டவன் பொற் பாதத்தை பணிந்து
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
3
கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம்
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற் காரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற் காரணம்
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நான்
தப்பாமல் ஆண்டவன் பொற் பாதத்தை பணிந்து
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
4
வீட்டிலும் காட்டிலும் வெளியிலும் வழியிலும்
பாட்டிலும் படிப்பிலும் தேட்டிலும் செழிப்பிலும்
நாட்டிலும் நகரிலும் ஞானமுயற்சிலும்
நாட்டிலும் நகரிலும் ஞானமுயற்சிலும்
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நான்
தப்பாமல் ஆண்டவன் பொற் பாதத்தை பணிந்து
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
5
தம்பூர் கின்னரர்கள் ஜாலர் வீணை மிரு
தங்கம் தப்லாவுடன் சங்கீத நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நான்
தப்பாமல் ஆண்டவன் பொற் பாதத்தை பணிந்து
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
6
துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
இன்பமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடைச் சாவுக்கென்றே நீ வீழினும்
கண்பஞ்சடைச் சாவுக்கென்றே நீ வீழினும்
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நான்
தப்பாமல் ஆண்டவன் பொற் பாதத்தை பணிந்து
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி
எப்போதும் நாதனை ஸ்தோத்திரி | Eppothum Naathanai Sthothiri / Eppodhum Naadhanai Sthothiri / Eppothum Naathanai Sthoththiri / Eppodhum Naadhanai Sthoththiri