எங்கும் நிறைந்த தெய்வமே / Engum Niraindha Deivame / Engum Niraintha Deivame / Engum Niraindha Deivamae / Engum Niraintha Deivamae

எங்கும் நிறைந்த தெய்வமே / Engum Niraindha Deivame / Engum Niraintha Deivame / Engum Niraindha Deivamae / Engum Niraintha Deivamae

1   
எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்திரிக்கின்றோம் ஏகமாய்

2   
உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய்

3   
கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சிலாக்கியம்
நாங்கள் நிறையச் செய்தாலே

4   
தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர் நாங்கள் ஏழைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!