எவ்வண்ணமாக கர்த்தரே / Evannamaaga Karththare / Evannamaaga Karthare

எவ்வண்ணமாக கர்த்தரே / Evannamaaga Karththare / Evannamaaga Karthare

1
எவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்

2
அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ

3
பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே

4
நான் குற்றவாளி ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே

5
ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்

6
இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்

7
இவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே
அவரைப் பற்றினேன்

Like this? Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!