என் உள்ளத்தை உணர்ந்த | En Ullathai Unarntha / En Ullaththai Unarntha / En Ullathai Unarndha / En Ullaththai Unarndha
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே
உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே
என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமே
உமக்காக நான் ஓட பெலனைத் தாருமே
பெலனை தாருமே உம் பெலனைத் தாருமே
என் இதய அன்பரே உம் பெலனைத் தாருமே
என் இதய அன்பரே உம் பெலனைத் தாருமே
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே
உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே
1
எனக்காக என்னில் இருக்கும் எந்தன் இயேசுவே
உமக்காக நான் இருக்க வழிகள் தாருமே
எனக்காக என்னில் இருக்கும் எந்தன் இயேசுவே
உமக்காக நான் இருக்க வழிகள் தாருமே
என்னை என்றும் ஏந்தி நிற்கும் எந்தன் இயேசுவே
என்னை என்றும் ஏந்தி நிற்கும் எந்தன் இயேசுவே
உம் வழிகள் நான் நடக்க பாதை காட்டுமே
உம் வழிகள் நான் நடக்க பாதை காட்டுமே
என் இதய அன்பரே உம் பாதை காட்டுமே
என் இதய அன்பரே உம் பாதை காட்டுமே
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே
உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே
2
எனக்காக உந்தன் ஜீவன் தந்த இயேசுவே
உந்தன் அன்பை பார்க்கும் விழிகள் தாருமே
எனக்காக எல்லாம் எப்போதும் தந்த இயேசுவே
எனக்காக எல்லாம் எப்போதும் தந்த இயேசுவே
உம்மில் என்றும் நான் வாழ வரங்கள் தாருமே
உம்மில் என்றும் நான் வாழ வரங்கள் தாருமே
என் இதய அன்பரே உம் வரங்கள் தாருமே
என் இதய அன்பரே உம் வரங்கள் தாருமே
என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமே
உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமே
என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமே
உமக்காக நான் ஓட பெலனைத் தாருமே
பெலனை தாருமே உம் பெலனைத் தாருமே
என் இதய அன்பரே உம் பெலனைத் தாருமே
என் இதய அன்பரே உம் பாதை காட்டுமே
என் இதய அன்பரே உம் வரங்கள் தாருமே
என் இதய அன்பரே உம் பெலனைத் தாருமே
உம் பாதை காட்டுமே உம் வரங்கள் தாருமே
என் உள்ளத்தை உணர்ந்த | En Ullathai Unarntha / En Ullaththai Unarntha / En Ullathai Unarndha / En Ullaththai Unarndha | Issac D., Neena Mariam, Annuncia Ragavarthini, Rohith Fernandes | Jijo C John | J. Francis Borgio