என் ஜீவன் நீர் தானே / En Jeevan Neerdhane / En Jeevan Neerdhanae / En Jeevan Neerthane / En Jeevan Neerthanae
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
1
என் கண்ணீர் துடைத்திடவே நீர் செந்நீர் சிந்தினிரே
என் பழியை போக்கிடவே நீர் பலியாய் மாறினிரே
என் கண்ணீர் துடைத்திடவே நீர் செந்நீர் சிந்தினிரே
என் பழியை போக்கிடவே நீர் பலியாய் மாறினிரே
சிலுவை சுமந்தீரே நீர் என்னை நினைத்தீரே
சிலுவை சுமந்தீரே என்னை நினைத்தீரே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
2
என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே
என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
3
நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே
உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
சிலுவை சுமந்தீரே என்னை நினைத்தீரே
மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே
எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே
