என் தேவன் என் வெளிச்சம் / En Devan En Velicham
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
1
தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார்
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
2
தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
3
தீங்கு நாளில் அவர் என்னை மறைத்துத்
தம் கரத்தினால் தாங்கிடுவார்
தம் கூடார மறைவிலே ஒளித்து வைத்து
செவ்வையான பாதையில் நித்தம் நடத்திடுவார்
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
4
உம் கிருபையிலே களிகூர்ந்து
வீண் மாயையை வெறுத்திடுவோம்
விண் உலகத்தின் வாழ்வை விரும்பியே நாம்
விசுவாசத்தில் என்றும் ஸ்திரப்படுவோம்
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்
என் தேவன் என் வெளிச்சம் / En Devan En Velicham| Julius Jacob, Sheeba Julius / Agape City Church, Tondiarpet, Chennai, Tamil Nadu, India