என் ஆவி ஆன்மா தேகமும் / En Aavi Aanmaa Degamum / En Aavi Aanma Thegamum
1
என் ஆவி ஆன்மா தேகமும்
இதோ படைக்கிறேன்
என்றும் உம் சொந்தமாகவும்
பிரதிஷ்டை செய்கிறேன்
2
ஆ இயேசு வல்ல இரட்சகா
உம் நாமம் நம்புவேன்
ரட்சிப்பீர் மா தயாபரா
உம் வாக்கை வேண்டுவேன்
3
எப்பாவம் நீங்க உறுப்பு
தந்தேன் சமூலமாய்
போராட்டம் வெற்றி சிறப்பு
படைக்கலங்களாய்
4
நான் உம்மில் ஜீவித்தல் மகா
மேலான பாக்கியம்
தெய்வ சுதா என் இரட்சகா
என் ஜீவனாயிரும்
5
என் நாதா திரு இரத்தத்தால்
சுத்தாங்கம் சொந்தமே
ஆனேன் உம் தூய ஆவியால்
பலி நான் உமக்கே