பெலமுள்ள நகரமாம் | Belamulla Nagaramam / Belamulla Nagaramaam
1
பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
சஞ்சலத்தில் வேறு வழியில்லை
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்
காத்துக் கொள்வார் காத்துக் கொள்வார்
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்
2
நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
விசுவாசக் கப்பலில் சேமமாக
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்
லோகம் வேண்டாம் லோகம் வேண்டாம்
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்
3
கழுகைப் போல் பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்
கழுகைப் போல் பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்
காத்திருந்தால் அவர் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு
பெலன் மக்களுக்கு பெலன் மக்களுக்கு
பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு
4
மரணம் தான் வருகினும் பயப்படாதே
விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
மரணம் தான் வருகினும் பயப்படாதே
விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்
விசுவாசிப்பாய் விசுவாசிப்பாய்
எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்
5
ஆறுதலடையு மந்நாடு சென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
ஆறுதலடையு மந்நாடு சென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
பரம சுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் பானம்செய்வோம்
பானம்செய்வோம் பானம்செய்வோம்
பரனோடு நித்தியம் பானம்செய்வோம்
பெலமுள்ள நகரமாம் | Belamulla Nagaramam / Belamulla Nagaramaam