இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் | Yesuve Unthan Masilla Ratham / Yesuve Undhan Maasillaa Raththam
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சிந்தினீரே
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
1
என்மேல் பாராட்டின உமதன்புக்
கீடாய் என்ன நான் செய்திடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்தக் கிருபையை நித்தம் பாடுவேன்
நரகாக்கினையில் நின்று மீட்ட
சுத்தக் கிருபையை நித்தம் பாடுவேன்
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
2
எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல்
தாங்கக் கூடாத மா பாரமே
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்து மறந்தும் தள்ளினீர்
மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா
மன்னித்து மறந்தும் தள்ளினீர்
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
3
யேகோவா என்னும் நாமம் உள்ளோரே
உமது சமூகம் இன்பமே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
நீருற்றாகவே மாற்றுகின்றீர்
அழுகை நிறைந்த பள்ளத்தாக்கை
நீருற்றாகவே மாற்றுகின்றீர்
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
4
எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போது
வலக்கரத்தாலே தாங்குகின்றீர்
மனப் பாரத்தால் சோர்ந்திடும் போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர்
மனப் பாரத்தால் சோர்ந்திடும் போது
ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர்
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
5
இயேசுவே எனக்கு செய்த எல்லா
உதவிகட்காய் என்ன செய்வேன்
இரட்சிப்பின் பாத்திரம் சுமந்தே நான்
பொன்னு நாமத்தைப் புகழ்ந்திடுவேன்
இரட்சிப்பின் பாத்திரம் சுமந்தே நான்
பொன்னு நாமத்தைப் புகழ்ந்திடுவேன்
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
6
எனக்காக நீர் யாவும் முடித்தீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்தே வருவேன்
எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் உம்
சிலுவை சுமந்தே வருவேன்
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்
எந்தனுக்காக சிந்தினீரே
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ
கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்
அத்தனையும் எனக்காகவோ
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
மா பாவியாம் என்னை நினைக்க
மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
தேவ தூதரிலும் மகிபனாய்
என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன்
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் | Yesuve Unthan Masilla Ratham / Yesuve Undhan Maasillaa Raththam | Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India