இயேசு நல்ல இயேசு | Yesu Nalla Yesu
இயேசு நல்ல இயேசு
என்னை இரட்சித்தீர்
பாவ சேற்றி நின்று தூக்கி எடுத்தீர்
ஜீவனுள்ள மட்டும் உம்மை பின் செல்வேன்
பின்பு மோட்ச வீட்டில் என்றும் வாழுவேன்
தந்தேன் எந்தன் நெஞ்சம் சொந்தமாய் உமக்கே
தந்தேன் எந்தன் ஜீவன் உந்தன் சேவைக்கே
1
பாவ வழி சென்று மாந்தர் சாகிறார்
ஜீவ வழி தப்பி மோசம் போகிறார்
ஆத்மாதாயம் செய்ய உந்தன் ஆவியால்
என்னை ஆட்கொண்டே உம் வல்ல இரட்சகா
தந்தேன் எந்தன் நெஞ்சம் சொந்தமாய் உமக்கே
தந்தேன் எந்தன் ஜீவன் உந்தன் சேவைக்கே
2
தாழ்மை மனதோடு உம்மை பின் செல்வேன்
சோதனை நெருக்கில் உம்மை பற்றுவேன்
திடன் கொண்டுலகை உம்மால் ஜெயிப்பேன்
பாடனுபவித்தும் முற்றும் நிலைப்பேன்
தந்தேன் எந்தன் நெஞ்சம் சொந்தமாய் உமக்கே
தந்தேன் எந்தன் ஜீவன் உந்தன் சேவைக்கே
இயேசு நல்ல இயேசு | Yesu Nalla Yesu | Shobana David, Rishi David | Rishi David
