இயேசு மீண்டுமாக வந்திடும் நாள் சமீபமே / Yesu Meendumaaga Vandhidum Naal Sameebame
1
இயேசு மீண்டுமாக வந்திடும் நாள் சமீபமே
தாசர் ஆவலோடு அவர்க்காய் காத்திடுவாரே
ஜீவ மார்க்கத்திலே முடிவுவரை நடத்திடுவாரே
ஏக பாலனை அந்நாளிலே பெற்றிடுவாரே
இயேசு வந்திடுவாரே மீண்டும் வந்திடுவாரே
வேகமாக மேகமீது வந்திடுவாரே
ஜீவ மார்க்கத்திலே முடிவுவரை சென்றிடுவோமே
ஏக பலனை அந்நாளிலே பெற்றிடுவோமே
2
இயேசு மீண்டுமாக வந்திடும் நாள் வரையிலே
ஆத்துமாக்களை ஆதாயம் செய்திடுவோமே
மின்னல் வானத்திலே சடுதியாக தோன்றுவது போல்
மன்னர் இயேசு இமைப்பொழுதே தோன்றிடுவாரே
இயேசு வந்திடுவாரே மீண்டும் வந்திடுவாரே
வேகமாக மேகமீது வந்திடுவாரே
ஜீவ மார்க்கத்திலே முடிவுவரை சென்றிடுவோமே
ஏக பலனை அந்நாளிலே பெற்றிடுவோமே
3
இயேசு மீண்டுமாக வந்திடும் நாளறியோமே
புத்தியுள்ள கன்னிகைபோல் விழித்திருப்போமே
எஜமானும் நம்மை உத்தம ஊழியனாக
நிச்சயமாகக் கண்டு பாக்கியம் அளிப்பாரே
இயேசு வந்திடுவாரே மீண்டும் வந்திடுவாரே
வேகமாக மேகமீது வந்திடுவாரே
ஜீவ மார்க்கத்திலே முடிவுவரை சென்றிடுவோமே
ஏக பலனை அந்நாளிலே பெற்றிடுவோமே