இயேசென்னும் நாமம் | Yesennum Naamam / Yesennum Namam

இயேசென்னும் நாமம் | Yesennum Naamam / Yesennum Namam

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

தீருமென் குறைவும் திதுகள் குறையும்
தீருமென் திகிலும் உரைக்கவும் பெயரும்
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

1
சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்
சஞ்சலம் யாவுமே அகற்றும் ஆ ஆ
சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்
சஞ்சலம் யாவுமே அகற்றும் ஆ ஆ

பந்தனை ஜெயித்து வந்தெனை அணைக்கும்
பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும்
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

2
வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்
வெவ்வேறு நாவினால் துதிக்க ஆ ஆ
வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்
வெவ்வேறு நாவினால் துதிக்க ஆ ஆ

வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே
வேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

3
பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்
நோய்பிணி யாவுமே தொலையும் ஆ ஆ
பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்
நோய்பிணி யாவுமே தொலையும் ஆ ஆ

அதிசயம் நடக்கும் அற்புதம் பெருகும்
அதிசயப் பெயரும் என்றென்றும் ஜெயிக்கும்
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

4
பயங்கர சர்ப்பத்தைப் பயமின்றி எடுக்கவும்
மயங்கிடும் நஞ்சை ஜெயிக்குமே ஆ ஆ
பயங்கர சர்ப்பத்தைப் பயமின்றி எடுக்கவும்
மயங்கிடும் நஞ்சை ஜெயிக்குமே ஆ ஆ

தயங்கி நிற்பவரை தாங்கிடும் பெலனே
தயங்கி வந்தவரை ஆற்றிடும் பெயரே
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

5
ஆ என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில்
ஆனந்தமே அதன் நினைவில் ஆ ஆ
ஆ என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில்
ஆனந்தமே அதன் நினைவில் ஆ ஆ

தேனிலும் இனிமை பேதைக்கு மகிமை
தேனிலும் இனிமை ஏழைக்கும் உரிமை
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

6
வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும்
தொனித்திட இயேசுவின் நாமம் ஆ ஆ
வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும்
தொனித்திட இயேசுவின் நாமம் ஆ ஆ

மடங்குமே முழங்கால் அடங்குமே துடுக்கும்
மடங்கு மெப்பெயரும் நடுங்குமே அவர்க்கு
இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரணே ஆ ஆ

இயேசென்னும் நாமம் | Yesennum Naamam / Yesennum Namam | D. G. S. Dhinakaran

இயேசென்னும் நாமம் | Yesennum Naamam / Yesennum Namam | Mahesh | Malamari Joy

இயேசென்னும் நாமம் | Yesennum Naamam / Yesennum Namam | Mahesh | Malamari Joy

இயேசென்னும் நாமம் | Yesennum Naamam / Yesennum Namam | S. Paulraj Kennedy

1 Comment on "இயேசென்னும் நாமம் | Yesennum Naamam / Yesennum Namam"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!