யெகோவா ஓசேனு | Yehovah Hosenu
உலகத்தின் உள்ளே நான் தோன்றும் முன்னே
அன்பின் நூலில் என்னை இணைத்தவரே
உம்மை நான் அறியும் முன்னாகவே
எனக்காக யாவும் செய்து முடித்தவரே
உம்மைப் போல் எவரையும் கண்டதில்லை என்
உயிரோடு உயிராக கலந்தவரே
கலந்தவரே கலந்தவரே
யெகோவா ஓசேனு யெகோவா ஓசேனு
என்னை உருவாக்கினவர்
யெகோவா ஓசேனு யெகோவா ஓசேனு
என்னை உருவாக்கினவர்
1
பார்வோனின் சேனைகள் துரத்தி வந்தும்
அரணானவர் என் அரணாகுவீர்
எல்லா வழிகளும் அடைக்கப்பட்டும்
நீர் என்னில் இருக்கையில் கலங்கிடேனே
கடலை தரையாக மாற்றினீரே
ஆற்றை கால் நடையாய் நான் கடந்திடுவேன்
கடந்திடுவேன் கடந்திடுவேன்
யெகோவா ஓசேனு யெகோவா ஓசேனு
என்னை உருவாக்கினவர்
யெகோவா ஓசேனு யெகோவா ஓசேனு
என்னை உருவாக்கினவர்
2
என் கிருபைகள் உனக்கு போதும் என்றார்
பெலவீனத்தில் பெலன் பூரணமே
நிந்தனையிலும் நெருக்கத்திலுமே
கிறிஸ்துவின் நிமித்தம் சந்தோஷமே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே நம்
ஆதியும் அந்தமும் இவர்தானே
இவர்தானே இவர்தானே
யெகோவா ஓசேனு யெகோவா ஓசேனு
என்னை உருவாக்கினவர்
யெகோவா ஓசேனு யெகோவா ஓசேனு
என்னை உருவாக்கினவர்
யெகோவா ஓசேனு யெகோவா ஓசேனு
என்னை உருவாக்கினவர்
யெகோவா ஓசேனு யெகோவா ஓசேனு
என்னை உருவாக்கினவர்
என்னை உருவாக்கினவர்
என்னை உருவாக்கினவர்
என்னை உருவாக்கினவர்
என்னை உருவாக்கினவர்
Yehovah Hosenu | Jhonson Rajdurai, Isaac D, Seles, Selvin, Rohith Fernandes, Neena Mariam | Isaac D | The Clarion Call