வேலைக்காரனின் கண்கள் | Velai Karanin Kangal / Velai Kaaranin Kangal
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்
வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும்
நீர் இரக்கம் செய்கின்ற வரையில்
நீர் இரக்கம் செய்கின்ற வரையில்
நான் உம்மை நோக்கி இருப்பேன்
நான் உம்மை நோக்கி இருப்பேன்
உந்தன் கரத்தை அல்ல என் தேவா
உந்தன் முகத்தை நோக்கி இருப்பேன்
உந்தன் கரத்தை அல்ல என் தேவா
உந்தன் முகத்தை தேடுகிறேன்
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்
வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும்
1
எனக்கு இரக்கம் செய்யும் தேவா
என் நிந்தை மாற்றுகின்ற நாதா
எந்தன் நீதி எல்லாம் கந்தை
உந்தன் சிந்தை என்னில் தாரும்
எனக்கு இரக்கம் செய்யும் தேவா
என் நிந்தை மாற்றுகின்ற நாதா
எந்தன் நீதி எல்லாம் கந்தை
உந்தன் சிந்தை என்னில் தாரும்
எந்தன் நீதி அல்ல என் தேவா
உந்தன் இரக்கம் நாடுகிறேன்
எந்தன் நீதி அல்ல என் தேவா
உந்தன் இரக்கம் கெஞ்சுகிறேன்
2
என்னை வழிநடத்தும் தேவா
என்னை ஆட்கொண்ட நாதா
உந்தன் சித்தம் நான் செய்ய
உந்தன் கிருபை என்னில் தாரும்
என்னை வழிநடத்தும் தேவா
என்னை ஆட்கொண்ட நாதா
உந்தன் சித்தம் நான் செய்ய
உந்தன் கிருபை என்னில் தாரும்
எந்தன் சித்தம் அல்ல என் தேவா
உந்தன் சித்தம் நாடுகிறேன்
எந்தன் சித்தம் அல்ல என் தேவா
உந்தன் சித்தம் கெஞ்சுகிறேன்
வேலைக்காரனின் கண்கள் எஜமானின் கரங்களை நோக்கும்
வேலைக்காரியின் கண்கள் எஜமாட்டி கரங்களை நோக்கும்
நீர் இரக்கம் செய்கின்ற வரையில்
நீர் இரக்கம் செய்கின்ற வரையில்
நான் உம்மை நோக்கி இருப்பேன்
நான் உம்மை நோக்கி இருப்பேன்