உம் சித்தம் போல் என்னை என்றும் / Um Siththam Pol Ennai Endrum / Um Sitham Pol Ennai Endrum
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
1
திருமார்பில் நான் சாய்ந்திடுவேன்
அருட் பிரயாண காலம் வரை
திருமார்பில் நான் சாய்ந்திடுவேன்
அருட் பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திரு சித்தத்தை
அறிவதல்லோ தூய வழி
பரனே உந்தன் திரு சித்தத்தை
அறிவதல்லோ தூய வழி
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
2
வழிப்பிரயாணி மூடனைப் போல்
வழி தவறா நடந்திடவே
வழிப்பிரயாணி மூடனைப் போல்
வழி தவறா நடந்திடவே
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும்
வழி இதுவே என்று சொல்லும்
இனிய சத்தம் தொனித்திடட்டும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
3
அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
அக்னி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம்
அடியார் மீது ஜொலித்திடட்டும்
இரவு பகல் கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே
இரவு பகல் கூட நின்று
என்றென்றுமாய் நடத்திடுமே
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
4
இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
இடுக்கமே என் அப்பமுமாய்
கண்ணீரோ என் தண்ணீருமாய்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும்
பருகிடினும் பயப்படேன் நான்
என்றென்றும் உம் சித்தம் போதும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
5
எண்ணிடேன் நான் யாதொன்றையும்
புண்ணியர் தேசம் காணும்வரை
எண்ணிடேன் நான் யாதொன்றையும்
புண்ணியர் தேசம் காணும்வரை
பரதேசியாய் சஞ்சரிப்பேன்
பாரம் என்னைத் தாக்கிடாமல்
பரதேசியாய் சஞ்சரிப்பேன்
பாரம் என்னைத் தாக்கிடாமல்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
6
உம் ஞானத்தை எனக்குத் தந்து
உம் வழிதனிலே நடத்திடுமே
சத்துரு என்னை மேற்கொள்ளாமல்
தினமும் என்னைக் காத்திடுமே
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற் பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
உம் சித்தம் போல் என்னை என்றும் / Um Siththam Pol Ennai Endrum / Um Sitham Pol Ennai Endrum | K. Jeberdson Abraham | A. K. Aldrin | Ezekiah Francis