சிலுவையை சுமந்த / Siluvaiyai Sumandha / Siluvaiyai Sumantha
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
என்னையும் தூக்கிச் சுமந்த இயேசுவே
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
என்னையும் தூக்கிச் சுமந்த இயேசுவே
உம்மைப் போல் யாருமில்லை
பரலோகம் என்னை சேர்க்க
பரலோகம் என்னை சேர்க்க
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
என்னையும் தூக்கிச் சுமந்த இயேசுவே
1
காணாமல் போன என்னையும் தேடி
வந்த என் தெய்வம் இயேசுவே
காணாமல் போன என்னையும் தேடி
வந்த என் தெய்வம் இயேசுவே
மனிதனின் அன்பு மாறும் உலகில்
மாறாத அன்பு நேசரின் அன்பு
மனிதனின் அன்பு மாறும் உலகில்
மாறாத அன்பு நேசரின் அன்பு
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
என்னையும் தூக்கிச் சுமந்த இயேசுவே
2
இயேசுவே உந்தன் பரிசுத்த இரத்தம்
எனக்காகவல்லோ சிந்தினீர்
இயேசுவே உந்தன் பரிசுத்த இரத்தம்
எனக்காகவல்லோ சிந்தினீர்
எத்தனை பாடுகள் எந்தன் வாழ்வில்
வந்தாலும் உம்மை விடுவதில்லை
எத்தனை பாடுகள் எந்தன் வாழ்வில்
வந்தாலும் உம்மை விடுவதில்லை
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
என்னையும் தூக்கிச் சுமந்த இயேசுவே
3
இயேசுவே உந்தன் மார்பினில் சாய
சீக்கிரம் வருவேன் உம்மிடமாய்
இயேசுவே உந்தன் மார்பினில் சாய
சீக்கிரம் வருவேன் உம்மிடமாய்
எத்தனை நாட்கள் நான் வாழ்ந்தாலும்
உம்மோடு வாழும் நாட்கள் போதும்
எத்தனை நாட்கள் நான் வாழ்ந்தாலும்
உம்மோடு வாழும் நாட்கள் போதும்
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
என்னையும் தூக்கிச் சுமந்த இயேசுவே
சிலுவையை சுமந்த தோள்களின் மீதே
என்னையும் தூக்கிச் சுமந்த இயேசுவே
உம்மைப் போல் யாருமில்லை
பரலோகம் என்னை சேர்க்க
பரலோகம் என்னை சேர்க்க