பூவின் நற்கந்தம் / Poovin Narkandham / Poovin Narkantham
1
பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
2
கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
3
நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
பூவின் நற்கந்தம் / Poovin Narkandham / Poovin Narkantham
பூவின் நற்கந்தம் / Poovin Narkandham / Poovin Narkantham
பூவின் நற்கந்தம் / Poovin Narkandham / Poovin Narkantham
