பரமண்டலத்திலுள்ள மகிமை / Paramandalaththillula Magimai / Paramandalathillula Magimai

பரமண்டலத்திலுள்ள மகிமை / Paramandalaththillula Magimai / Paramandalathillula Magimai

1         
பரமண்டலத்திலுள்ள
மகிமை என் ரம்மியம்
இயேசு என்கிற அன்புள்ள
ரட்சகர் என் பொக்கிஷம்
பரலோக நன்மைகள்
என்னுடைய ஆறுதல்

2        
வேறே பேர் மண்ணாஸ்தியாலே
தங்களைத் தேற்றட்டுமேன்
நான் என் நெஞ்சை இயேசுவாலே
தேற்றி விண்ணை நோக்குவேன்
மண் அழியும் இயேசுவோ
என்றும் நிற்கிறார் அல்லோ

3        
எனக்கவரில் மிகுந்த
ஆஸ்தி அகப்பட்டது
விக்கினங்களால் சூழுண்ட
லோக ஆஸ்தி ஏதுக்கு
இயேசுதான் என் ஆத்துமம்
தேடிய நற்பொக்கிஷம்

4        
லோக இன்பத்தை ருசிக்கும்
நூறு வருஷத்திலும்
இயேசுவோடு சஞ்சரிக்கும்
ஒரு நாளே இங்கேயும்
மேன்மையே அங்கவரை
சேர்ந்தாலோ வாழ்வெத்தனை

5        
எனக்கு மோட்சானந்தத்தில்
பங்குண்டாக இயேசுவே
நீர்தான் இவ்வனாந்தரத்தில்
எனக்குத் துணையாமே
ஆ நான் இன்றும் என்றைக்கும்
உம்முடன் இருக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!