நித்திய வாழ்வின் தேவனே | Nithya Vaazhvin Devane / Niththya Vaazhvin Devane / Nithya Vazhvin Devane / Niththya Vazhvin Devane
நித்திய வாழ்வின் தேவனே
ஜீவ ஒளி நீரே
சத்திய தேவ மைந்தனே
பாரில் வந்தவரே
என்னை மீட்க உம்மையே
தியாகம் செய்த தேவனே
பாவி என்னை மீட்கவே
கருணை காட்டும் தேவனே
உந்தன் சித்தம் யாவுமே
எந்தன் சித்தம் ஆக்குமே
நித்திய வாழ்வின் தேவனே
ஜீவ ஒளி நீரே
சத்திய தேவ மைந்தனே
பாரில் வந்தவரே
பொய்யும் புரட்டும் சூழ்ந்திடும்
மாய உலக வாழ்கையில்
தூய்மை ஆக்க உன்னையே
தேவன் தந்தார் தம்மையே
பெறுவோம் அருளை பெறுவோம்
நாதன் நாமம் போற்றியே
பெறுவோம் அருளை பெறுவோம்
நாதன் நாமம் போற்றியே
தருவோம் நம்மை தருவோம்
இயேசு அன்பில் என்றும் வாழவே
நித்திய வாழ்வின் தேவனே
ஜீவ ஒளி நீரே
சத்திய தேவ மைந்தனே
பாரில் வந்தவரே
தேவ மகிமை சூழ்ந்திடும்
இயேசு வந்த வாழ்கையில்
பாவம் தீர வா வா
உந்தன் ஜீவன் காக்க வா
பாவம் தீர வா வா
உந்தன் ஜீவன் காக்க வா
கருணை தேவன் மடியில்
நீயும் சாய்ந்தால் துன்பம் தீருமே
நித்திய வாழ்வின் தேவனே
ஜீவ ஒளி நீரே
சத்திய தேவ மைந்தனே
பாரில் வந்தவரே
என்னை மீட்க உம்மையே
தியாகம் செய்த தேவனே
பாவி என்னை மீட்கவே
கருணை காட்டும் தேவனே
உந்தன் சித்தம் யாவுமே
எந்தன் சித்தம் ஆக்குமே
நித்திய வாழ்வின் தேவனே
ஜீவ ஒளி நீரே
சத்திய தேவ மைந்தனே
பாரில் வந்தவரே
நித்திய வாழ்வின் தேவனே | Nithya Vaazhvin Devane / Niththya Vaazhvin Devane / Nithya Vazhvin Devane / Niththya Vazhvin Devane | Vijay Yesudas | T. Ramesh | Jayakumar