நன்றி சொல்வேனே | Nandri Solvaenae
நன்றி சொல்வேனே இயேசு ராஜனே
நன்னயம் அருளிய நாதனே
நிறைவுகள் தந்தீரே குறைவுகள் நீக்கியே
நிகரில்லாத தேவனே
என் உயிரும் நீர் தானே
என் உறவும் நீர் தானே
என் நலனும் நீர் தானே
என் பெலனும் நீர் தானே
1
அத்தன் பாதமே அபயம் கொண்டேனே
ரத்தம் சிந்தியே மீட்டீரே
தந்தை தாயாகி எல்லாமுமாகி
எம்மை சேயாக்கி கொண்டீரே
என் உயிரும் நீர் தானே
என் உறவும் நீர் தானே
என் நலனும் நீர் தானே
என் பெலனும் நீர் தானே
2
காயம் ஆற்றியே கவலை மாற்றியே
நெஞ்சம் தேற்றிய நேசரே
உம்மை போற்றியே உள்ளம் ஊற்றியே
துதி சாற்றினோம் இயேசுவே
என் உயிரும் நீர் தானே
என் உறவும் நீர் தானே
என் நலனும் நீர் தானே
என் பெலனும் நீர் தானே
நன்றி சொல்வேனே | Nandri Solvaenae | Preethi Esther Emmanuel | Stephen J Renswick | Maneksha Babu J
