நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் / Namadhu Yesu Kiristhuvin Naamam / Namathu Yesu Kristhuvin Namam

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் / Namadhu Yesu Kiristhuvin Naamam / Namathu Yesu Kristhuvin Namam

1
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

2
அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

3
பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

4
பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

5
நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

6
பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம்

தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் / Namadhu Yesu Kiristhuvin Naamam / Namathu Yesu Kristhuvin Namam | Hema John, Beena | Llewellyn Samuel | Sarah Navaroji

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் / Namadhu Yesu Kiristhuvin Naamam / Namathu Yesu Kristhuvin Namam | Sheela Daniel / Elim Revival Church, Singapore | Sarah Navaroji

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் / Namadhu Yesu Kiristhuvin Naamam / Namathu Yesu Kristhuvin Namam | Pushpa Samuel / New Hope Ministry (NHM) | Sarah Navaroji

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!