நல் மீட்பரே உம்மேலே / Nal Meetpare Ummele

நல் மீட்பரே உம்மேலே / Nal Meetpare Ummele

1   
நல் மீட்பரே உம்மேலே
என் பாவம் வைக்கிறேன்
அன்புள்ள கையினாலே
என் பாரம் நீக்குமேன்
நல் மீட்பரே உம்மேலே
என் குற்றம் வைக்க நீர்
உம் தூய ரத்தத்தாலே
விமோசனம் செய்வீர்

2   
நல் மீட்பரே உம்மேலே
என் துக்கம் வைக்கிறேன்
இப்போதிம்மானுவேலே
எப்பாடும் நீக்குமேன்
நல் மீட்பரே உம்மேலே
என் தீனம் வைக்க நீர்
உம் ஞானம் செல்வத்தாலே
பூரணமாக்குவீர்

3   
நல் மீட்பரே உம்பேரில்
என் ஆத்மா சார நீர்
சேர்த்து உம் திவ்விய மார்பில்
சோர்பெல்லாம் நீக்குவீர்
நேசா! இம்மானுவேலே!
இயேசென்னும் நாமமும்
உகந்த தைலம்போலே
சுகந்தம் வீசிடும்

4   
நல் மீட்பரே பாங்காக
அன்போடு சாந்தமும்
நீர் தந்தும் சாயலாக
சீராக்கி மாற்றிடும்
நல் மீட்பரே உம்மோடு
பின் விண்ணில் வாழுவேன்
நீடூழி தூதர் பாட
பாடின்றிப் பூரிப்பேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!