முள் கிரீடம் பூண்ட நாதனார் / Mul Kreedam Poonda Naadhanaar / Mul Kreedam Poonda Naathanaar / Mul Kreedam Poonda Nadhanar / Mul Kreedam Poonda Nathanar
1
முள் கிரீடம் பூண்ட நாதனார்
மா மாட்சி பெற்றாரே
விண் கிரீடம் இப்போ சூடினார்
வென்றோராம் வீரரே
2
உன்னத ஸ்தானம் விண்ணிலே
இவர்க்கே சொந்தமாம்
மன்னாதி மன்னர் கர்த்தரே
விண் மாட்சி ஜோதியாம்
3
அண்ணலின் நாமம் அன்பையும்
நன்றாய் அறிந்தோராம்
விண்ணோர் மண்ணோர் மகிழ்ச்சியும்
இம்மீட்பர் நாதராம்
4
சிலுவையின் மா நிந்தையும்
பேரருள் பெறுவார்
நிலையாம் நாமம் பூரிப்பும்
அன்னோர் அடைகுவார்
5
நாதர்போல் பாரில் பாடுற்றே
அவரோடாள்வாராம்
தெய்வன்பின் மறை அறிவே
சந்தோஷம் பலனாம்
6
சிந்தை சாவான சிலுவை
நம் ஜீவன் சுகமாம்
நம் சம்பத்து நம் நம்பிக்கை
நம் ஓயா தியானமாம்