உயிரில் கலந்தவர் / Uyiril Kalandhavar

உயிரில் கலந்தவர் / Uyiril Kalandhavar

உயிரில் கலந்தவர்
உயிரைத் தந்தவர்
உறவாய் மாறினீர்
உம் அன்பைப் பாடுவேன்

என்னுள் இருப்பவர்
இதயம் கவர்ந்தவர்
இன்பம் தருபவர்
உம் அன்பைப் பாடுவேன்

உயிரே உயிரே உம்மை போல் ஒரு தெய்வம் இல்லை
உறவே உறவே உம்மை அன்றி வேறாருமில்லை

1
இரத்தத்தில் கிடந்த என்னை பிழைத்திரு என்றீரே
அன்பென்னும் சால்வையாலே சிங்காரமாக்கினீர்
இந்த அன்புக்கு என்ன கொடுப்பேன்
உம் அன்புக்கு என்னைக் கொடுப்பேன்

உயிரே உயிரே உம்மை போல் ஒரு தெய்வம் இல்லை
உறவே உறவே உம்மை அன்றி வேறாருமில்லை

2
தண்ணீர்கள் கடக்கையிலும் அக்கினியில் நடக்கையிலும்
என்னோடு இருந்தவரே தோளின் மேல் சுமந்தீரே
இந்த உதவிக்கு என்ன கொடுப்பேன்
உம் அன்பை உலகிற்கு சொல்லி கொடுப்பேன்

உயிரே உயிரே உம்மை போல் ஒரு தெய்வம் இல்லை
உறவே உறவே உம்மை அன்றி வேறாருமில்லை

3
சிலுவையை சுமந்தவரே மரணத்தை வென்றவரே
நடுச்சுவரை தகர்த்து என்னை சுவிகாரம் செய்தீரே
இந்த உறவுக்கு என்ன கொடுப்பேன்
என் உயிரையே அள்ளிக் கொடுப்பேன்

உயிரே உயிரே உம்மை போல் ஒரு தெய்வம் இல்லை
உறவே உறவே உம்மை அன்றி வேறாருமில்லை

உயிரே உயிரே உம்மை போல் ஒரு தெய்வம் இல்லை
உறவே உறவே உம்மை அன்றி வேறாருமில்லை

உறவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!