மிஷனரி பயணமாய் குடும்பத்தோட போனோம் / Missionary Payanamaai Kudumbaththoda Ponoom / Missionary Payanamai Kudumbaththoda Ponoom / Missionary Payanamaai Kudumbathoda Ponoom / Missionary Payanamai Kudumbathoda Ponoom
மிஷனரி பயணமாய் குடும்பத்தோட போனோம்
காடு மலமேடு எல்லாம் நடந்து கடந்து போனோம்
தேசங்களின் எல்லைகள் எல்லாம் எங்களுக்கு இல்ல
சுவிஷேச பாரம் தான் எங்களுக்கு எல்ல
தேசங்களின் எல்லைகள் எல்லாம் எங்களுக்கு இல்ல
சுவிஷேச பாரம் தான் எங்களுக்கு எல்ல
மிஷனரி பயணமாய் குடும்பத்தோட போனோம்
காடு மலமேடு எல்லாம் நடந்து கடந்து போனோம்
1
ஊரு பேறு தெரியல
உறங்க இடமும் சரியில்ல
ஊரு பேறு தெரியல
உறங்க இடமும் சரியில்ல
காய்கறியுங் கிடைக்கல
கஞ்சி ரொட்டிக்கு தொட்டுக்கற
தேவனோட வார்த்தை தான்
மன்னானு நாங்க மறக்கல
மிஷனரி பயணமாய் குடும்பத்தோட போனோம்
காடு மலமேடு எல்லாம் நடந்து கடந்து போனோம்
2
கோட்டு சூட்டு இல்ல எங்க
ஓட்ட சட்டைய மறைக்க
கோட்டு சூட்டு இல்ல எங்க
ஓட்ட சட்டைய மறைக்க
பூட்சு வாங்க முடியல முக்கா
பேண்ட்டோட இணைக்க
நீதி என்னும் வஸ்திரமே
எங்க வாழ்வ நிறைக்க
மிஷனரி பயணமாய் குடும்பத்தோட போனோம்
காடு மலமேடு எல்லாம் நடந்து கடந்து போனோம்
3
அஞ்சு லட்சம் மேடையில
பிரசங்கம் பண்ண விரும்பல
அஞ்சு லட்சம் மேடையில
பிரசங்கம் பண்ண விரும்பல
அஞ்சாயிரம் சம்பளம்
எங்க குடும்பத்தேவைய மீறல
இயேசுவோட அன்பை விட்டு
எதுவும் எங்கள பிரிக்கலா
மிஷனரி பயணமாய் குடும்பத்தோட போனோம்
காடு மலமேடு எல்லாம் நடந்து கடந்து போனோம்
4
ஏசி காரு வீடு வாசலும்
எங்களுக்கு இல்ல
ஏசி காரு வீடு வாசலும்
எங்களுக்கு இல்ல
காட்டு மரமும் வாய்க்க தண்ணியும்
என்றும் எங்கள வெறுக்கல
இயேசு போல ஊழியம் பண்ணும்
வாய்ப்ப நாங்க ஒதுக்கல
மிஷனரி பயணமாய் குடும்பத்தோட போனோம்
காடு மலமேடு எல்லாம் நடந்து கடந்து போனோம்