மெய் அன்பரே உம் மா அன்பை / Mei Anbare Um Maa Anbai / Mei Anbarae Um Maa Anbai

மெய் அன்பரே உம் மா அன்பை / Mei Anbare Um Maa Anbai / Mei Anbarae Um Maa Anbai

1         
மெய் அன்பரே உம் மா அன்பை
உய்த்தெம்மைச் சொந்தமாக்கினீர்
பூலோக பாக்கியத்தால் எம்மை
மேலோக சிந்தையாக்குவீர்

2        
உம் ஆவியால் எம் உள்ளத்தில்
உந்தன் மா நோக்கம் காட்டுவீர்
உம் நோக்கம் பூர்த்தியாகிட
எம் நெஞ்சில் அன்பும் நாட்டினீர்

3        
மெய் அன்பால் அன்பர் ஸ்வாமி
எய்துவார் உன்னத நிலை
பேரின்ப பேறு ஆன்மாவில்
பாரினில் மேலாம் வாழ்க்கையை

4        
தம் உள்ளம் ஒன்றாய் இணைக்கும்
தம்பதிகள் இவருக்கே
நித்தம் புத்தன்பு இன்பமும்
சித்தமே வைத்து ஈயுமே

5        
நற்குணம் யாவும் இவரில்
நன்கே அமைந்து தீமையை
அகற்றி பெற நெஞ்சத்தில்
அழகு வன்மை தூய்மையை

6        
ஏகமாய் ஜீவ பாதையில்
சுகமாய் வாழ உம்மிலே
தம் அன்பை ஊன்றி வாழ்க்கையில்
எத்துன்பம் கஷ்டம் மேற்கொண்டே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!