மனமிரங்கும் தேவா மனமிரங்கும் | Manamirangum DevaManamirangum / Manamirangum Devaa Manamirangum
மனமிரங்கும் தேவா மனமிரங்கும் என்
தேசத்தின் மீது மனமிரங்கும்
மனமிரங்கும் தேவா மனமிரங்கும் என்
தேசத்தின் மீது மனமிரங்கும்
எந்தனின் பாவங்கள் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோ
எந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ
எந்தனின் பாவங்கள் துரோகங்கள் தேசத்தின் வாதைகளோ
எந்தனின் பாவங்கள் மரணத்தின் ஓலங்களோ
மனமிரங்கும் தேவா மனமிரங்கும் என்
தேசத்தின் மீது மனமிரங்கும்
1
பாவி என்று என்னை அறிந்திருந்தும்
துரோகி என்று என்னை தெரிந்திருந்தும்
உம் ரத்தத்தால் என்னை மீட்டெடுத்தீர்
புத்திர சுவிகாரத்தை எனக்கு தந்தீர்
மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ
தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ
மீண்டுமாய் பாவத்தில் விழுந்தேனோ
தேசத்தின் வாதைக்கு காரணம் ஆனேனோ
மனமிரங்கும் தேவா மனமிரங்கும் என்
தேசத்தின் மீது மனமிரங்கும்
2
உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி
பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில்
உம் நாமம் தரித்த நான் என் தலையை தாழ்த்தி
பொல்லாததை மறந்து விழுந்தேன் உம் பாதத்தில்
பரலோக தேவனே மன்னியுமே
தேசத்தில் க்ஷேமத்தை தந்திடுமே
பரலோக தேவனே மன்னியுமே
தேசத்தில் க்ஷேமத்தை தந்திடுமே
மனமிரங்கும் தேவா மனமிரங்கும் என்
தேசத்தின் மீது மனமிரங்கும்
மன்னியும் நீர் மன்னியும் என் பாவத்தை நீர் மன்னியும்
தந்திடும் நீர் தந்திடும் என் தேசத்தில் க்ஷேமம் தந்திடும்
மன்னியும் நீர் மன்னியும் என் பாவத்தை நீர் மன்னியும்
தந்திடும் நீர் தந்திடும் என் தேசத்தில் க்ஷேமம் தந்திடும்
தலைகளை தாழ்த்தி வணங்குகிறேன்
பரலோக தேவனே கேட்டிடுமே
தலைகளை தாழ்த்தி வணங்குகிறேன்
பரலோக தேவனே கேட்டிடுமே
Manamirangum DevaManamirangum / Manamirangum Devaa Manamirangum | Nobel Augustine M. | Alwyn M.