கர்த்தர் தம் கிரியை செய்கிறார் / Karththar Tham Kiriyai Seigiraar / Karthar Tham Kiriyai Seigiraar / Karththar Tham Kiriyai Seikiraar / Karthar Tham Kiriyai Seikiraar

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் / Karththar Tham Kiriyai Seigiraar / Karthar Tham Kiriyai Seigiraar / Karththar Tham Kiriyai Seikiraar / Karthar Tham Kiriyai Seikiraar

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் / Karththar Tham Kiriyai Seigiraar / Karthar Tham Kiriyai Seigiraar / Karththar Tham Kiriyai Seikiraar / Karthar Tham Kiriyai Seikiraar / Karththar Tham Kiriyai Seigirar / Karthar Tham Kiriyai Seigirar / Karththar Tham Kiriyai Seikirar / Karthar Tham Kiriyai Seikirar

1   
கர்த்தர் தம் கிரியை செய்கிறார்
ஆண்டாண்டுகள் தோறுமே
கர்த்தர் தம் கிரியை செய்கிறார்
அவர் காலம் வருமே
ஆண்டுகள் செல்ல வந்திடும் ஆம்
அவரின் ராஜ்யமே
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

2   
கர்த்தரின் செய்தி கேட்பராம்
பூமி எங்கும் உள்ளோரே
பக்தர் அச்செய்தி கூறுவார்
அவர் வாக்கை கைக்கொண்டே
கண்டமே தீவே கேட்பீரே
ஆம் அவரின் வார்த்தையே
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

3   
கர்த்தரின் கிரியை செய்திட
மாந்தரை ஒன்றாக்கிட
அத்தனார் சாந்த பிரபுவின்
திவ்விய ராஜ்யம் தோன்றிட
தொண்டராம் நாம் என் செய்வதாம்
ஆம் விரைந்து வந்திட
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

4   
கர்த்தரின் சுவிசேஷமாம்
மகத்தான ஜோதியை
எத்திக்கிலும் பரப்பிட
வாரும் ஏற்றும் கொடியை
துண்டிப்போம் பாவம் சாபத்தை
ஆம் அவரின் ஆவியால்
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

5   
கர்த்தரின் துணையின்றியே
வேலை யாவும் வீணாமே
வித்தில் விண்ணுயிர் இல்லையேல்
விளைவு நாம் காணோமே
ஆயின் ஆண்டுகள் செல்ல வந்திடும் ஆம்
அவரின் ராஜ்யமே
ஆண்டவர் மகிமை புவியை நிரப்பும்
ஆழி ஜலம் போலவே

கர்த்தர் தம் கிரியை செய்கிறார் / Karththar Tham Kiriyai Seigiraar / Karthar Tham Kiriyai Seigiraar / Karththar Tham Kiriyai Seikiraar / Karthar Tham Kiriyai Seikiraar / Karththar Tham Kiriyai Seigirar / Karthar Tham Kiriyai Seigirar / Karththar Tham Kiriyai Seikirar / Karthar Tham Kiriyai Seikirar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!