என்னோடு எந்நாளும் / Ennodu Ennaalum / Ennodu Ennalum
தூரம் போவாயோ சூலமித்தியே
தூரம் போவாயோ
உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
நீ கேட்டு வாராயோ
ஏக்கம் திரைபோல் அது விலகிடும்
காயம் மேகங்கள் போல மறையுமே
அவை மறையுமே
கண்ணீர் மழை போல் அது தணிந்திடும்
தேவை அலை போல் அது ஓய்ந்திடும்
ஆகுமே என் தேவனால் ஆகுமே
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
தூரம் போவாயோ சூலமித்தியே
தூரம் போவாயோ
உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
நீ கேட்டு வாராயோ
1
பாரம் இருள் போல் அது அகன்றிடும்
கலக்கம் தீ போல் அது அணைந்திடும்
நம்பிக்கை வானம் போல உயருமே
தோல்விகள் பனி போல் அவை கரைந்திடும்
பயமோ நீர் போல் அது ஓடிடும்
ஆயுதங்கள் எழும்பினாலும் வாய்க்காதே
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
2
எனக்கொன்றும் குறைவில்லையே
என் பெலத்தினால் அல்லவே
தேவன் உம் அன்பு என் மேல் நிலை கொண்டு நிற்க
உயருவேன் வாழுவேன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்
தூரம் போவாயோ சூலமித்தியே
தூரம் போவாயோ
உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
நீ கேட்டு வாராயோ
என்னோடு எந்நாளும் / Ennodu Ennaalum / Ennodu Ennalum | Arpana Sharon Rajkumar | John Rohith