எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் | Ennipar Nee Ennipar / Ennipaar Nee Ennipaar / Ennippar Nee Ennippar / Ennippaar Nee Ennippaar
எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
1
வாக்குத் தவறாது தேவன் உன்னை
வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார்
வாக்குத் தவறாது தேவன் உன்னை
வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார்
போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை
போஷித்துக் காத்ததை எண்ணிப்பார்
போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை
போஷித்துக் காத்ததை எண்ணிப்பார்
எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
2
தாயும் தந்தையும் உன்னை மறந்தபோதும்
தாங்கி அணைத்ததை எண்ணிப்பார்
தாயும் தந்தையும் உன்னை மறந்தபோதும்
தாங்கி அணைத்ததை எண்ணிப்பார்
தாய் மறந்தாலும் நான் மறவேன் என
தயவாய்க் காத்ததை எண்ணிப்பார்
தாய் மறந்தாலும் நான் மறவேன் என
தயவாய்க் காத்ததை எண்ணிப்பார்
எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
3
அறியாமையுள்ள காலங்களைத் தேவன்
பாராமல் இருந்ததை எண்ணிப்பார்
அறியாமையுள்ள காலங்களைத் தேவன்
பாராமல் இருந்ததை எண்ணிப்பார்
அறிந்ததும் அறியா செய்த பிழைகள்
அனைத்தும் பொறுத்ததை எண்ணிப்பார்
அறிந்ததும் அறியா செய்த பிழைகள்
அனைத்தும் பொறுத்ததை எண்ணிப்பார்
எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
4
தூரமாய்ச் சென்ற உன்னைத் தூக்கிச் சுமந்து
மந்தையில் சேர்த்ததை எண்ணிப்பார்
தூரமாய்ச் சென்ற உன்னைத் தூக்கிச் சுமந்து
மந்தையில் சேர்த்ததை எண்ணிப்பார்
ஆரங்கள் சூட்டி அலங்கரித்து
ஆலயமாக்கினார் எண்ணிப்பார்
ஆரங்கள் சூட்டி அலங்கரித்து
ஆலயமாக்கினார் எண்ணிப்பார்
எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
5
சீக்கிரம் வருவேன் என்றுரைத்தவரை
சீக்கிரம் காண்பதை எண்ணிப்பார்
சீக்கிரம் வருவேன் என்றுரைத்தவரை
சீக்கிரம் காண்பதை எண்ணிப்பார்
துயரங்கள் நீக்கி கண்ணீர் துடைத்து தம்
மார்போடு அணைப்பதை எண்ணிப்பார்
துயரங்கள் நீக்கி கண்ணீர் துடைத்து தம்
மார்போடு அணைப்பதை எண்ணிப்பார்
எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உன்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்
எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் | Ennipar Nee Ennipar / Ennipaar Nee Ennipaar / Ennippar Nee Ennippar / Ennippaar Nee Ennippaar