என்னை மன்னியும் / Ennai Manniyum
1
உம்மை நான் பார்க்கையிலே
என் பாவம் தெரிகிறதே
உம் பாதம் வகையிலே
பாவங்கள் விலகிடுதே
உம்மை நான் பார்க்கையிலே
என் பாவம் தெரிகிறதே
உம் பாதம் வகையிலே
பாவங்கள் விலகிடுதே
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்
2
வழி விலகும் நேரமெல்லாம்
உம் சத்தம் கேட்கிறதே
வழி இதுவே என்றென்னை
உம் பக்கம் இழுக்கிறதே
வழி விலகும் நேரமெல்லாம்
உம் சத்தம் கேட்கிறதே
வழி இதுவே என்றென்னை
உம் பக்கம் இழுக்கிறதே
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்
3
கண்ணிருந்தும் குருடனைப்போல்
இருள் சூழ்ந்து நிற்கின்றேன்
என் வாழ்வின் சூரியனே
என் இருளை நீக்கிடுமே
கண்ணிருந்தும் குருடனைப்போல்
இருள் சூழ்ந்து நிற்கின்றேன்
என் வாழ்வின் சூரியனே
என் இருளை நீக்கிடுமே
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்
4
தாயிழந்த சேயாக
தவிக்கின்றேன் உமக்காக
தாயுள்ளம் கொண்டவரே
தாமதம் ஏன் தயை புரிய
தாயிழந்த சேயாக
தவிக்கின்றேன் உமக்காக
தாயுள்ளம் கொண்டவரே
தாமதம் ஏன் தயை புரிய
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்