எனக்காகவே | Enakagave / Enakagavey / Enakkaagave / Enakkaagavey
நீங்க துவங்கின இந்த ஓட்டத்தை
நீர் சொல்லும் வரையில் ஓடிடுவேன்
துவங்கின உம்மால் நிறைவேற்றக்கூடும்
அதை மட்டும் எண்ணி ஓடிடுவேன்
திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும்
நான் நோக்கும் ஒரு திசை நீர்தான் ஐயா
எனக்காகவே எப்பொழுதும்
வானங்களை திறப்பவரே
தடையான பாதையிலும்
மேலானதை திறப்பவரே
1
இலைகள் உதிர்ந்த நாட்களிலே
நான் மரித்து போனேன் என்றனரே
கனிகளின் அறிகுறி இல்லாததால்
பிழைப்பதே அரிது என்றனரே
நீர் என்னுள் வேராக இருப்பதினை
நான் மறுபடி தளிர்த்ததில் காண்பித்தீரே
எனக்காகவே எப்பொழுதும்
வானங்களை திறப்பவரே
தடையான பாதையிலும்
மேலானதை திறப்பவரே
2
உலகத்தின் செல்வாக்கை பயன்படுத்தி
என்னை இல்லாமல் ஆக்குவேன் என்றனரே
மாம்ச சிந்தையை பயன்படுத்தி
என் வாசனை கெடுத்திட முயன்றனரே
பரியாசம் செய்தோரின் கண்கள் முன்னே
என் ஊழிய அலங்கத்தை எழுப்பினீரே
எனக்காகவே எப்பொழுதும்
வானங்களை திறப்பவரே
தடையான பாதையிலும்
மேலானதை திறப்பவரே
எனக்காகவே | Enakagave / Enakagavey / Enakkaagave / Enakkaagavey | Joel Thomasraj / Apostolic Christian Assembly (ACA), Avadi Ministry, Avadi, Tamil Nadu, India / John Jebaraj