என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே | En Nesar Yesuvin Mel Saarndhe / En Nesar Yesuvin Mel Saarnthe
என் நேசர் இயேசுவின் மேல் பாடுகிறேன் உன்னதப்பாட்டு
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
1
லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூய பிதா
லீலி புஸ்பம் சரோனின் ரோஜா
பாலிலும் வெண்மை தூய பிதா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா
பூரண ரூப சௌந்தர்யமே
பேர் சிறந்த இறைவா
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
2
கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
கன்னியர்கள் நேசிக்கும் தேவா
கர்த்தரின் நாமம் பரிமளமே
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழுத்துக் கொண்டார்
இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்
என்னையும் இழுத்துக் கொண்டார்
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
3
நேசக்கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
நேசக்கொடி மேல் பறந்தோங்க
நேசர் பிரசன்னம் வந்திறங்க
கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே
கிச்சலி மரத்தின் கீழ் அடைந்தேன்
கர்த்தரின் ஆறுதலே
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
4
தென்றலே வா வாடையே எழும்பு
தூதாயீம் நற்கனி தூயருக்கே
தென்றலே வா வாடையே எழும்பு
தூதாயீம் நற்கனி தூயருக்கே
வேலி அடைத்த தோட்டமிதே
வந்திங்கு உலாவுகின்றார்
வேலி அடைத்த தோட்டமிதே
வந்திங்கு உலாவுகின்றார்
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
5
நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
நாட்டினிலே பூங்கனி காலம்
காட்டுப்புறாவின் பாட்டொலிக்கும்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார்
கன்மலை சிகரம் என் மறைவே
இந்நேரமே அழைத்தார்
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
6
நித்திரையே செய்திடும் ராவில்
நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
நித்திரையே செய்திடும் ராவில்
நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே
என் கதவருகே நின்றழைத்த
இயேசுவை நேசிக்கிறேன்
என் கதவருகே நின்றழைத்த
இயேசுவை நேசிக்கிறேன்
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
7
நேசத் தழல் இயேசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
நேசத் தழல் இயேசுவின் அன்பே
நேசம் மரணம் போல் வலிதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே
வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்
உள்ளம் அணைந்திடாதே
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
8
தூப ஸ்தம்பம் போலவே எழும்பி
தேவ குமாரன் வந்திடுவார்
தூப ஸ்தம்பம் போலவே எழும்பி
தேவ குமாரன் வந்திடுவார்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன்
அம்மினதாபின் இரதம் போல
அன்று பறந்து செல்வேன்
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்
துன்ப வனாந்தரத்தில் நடந்திட
இன்ப நல் வாழ்வடைந்தேன்
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே | En Nesar Yesuvin Mel Saarndhe / En Nesar Yesuvin Mel Saarnthe | Sarah Navaroji
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே | En Nesar Yesuvin Mel Saarndhe / En Nesar Yesuvin Mel Saarnthe | Hannah John | Sarah Navaroji
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே | En Nesar Yesuvin Mel Saarndhe / En Nesar Yesuvin Mel Saarnthe | Julice Belcitta Samuel | Sathish Kumar | Sarah Navaroji
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே | En Nesar Yesuvin Mel Saarndhe / En Nesar Yesuvin Mel Saarnthe | Great Assembly of Holy Mountain, Vepery, Chennai, Tamil Nadu, India | Sarah Navaroji
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே | En Nesar Yesuvin Mel Saarndhe / En Nesar Yesuvin Mel Saarnthe | Levlin Samuel | Sarah Navaroji
என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே | En Nesar Yesuvin Mel Saarndhe / En Nesar Yesuvin Mel Saarnthe | New Creation Songs | Sarah Navaroji